நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
1. மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
2. தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே
Comments are off this post