Varushathai Umathu Nanmaiyal Mudi Lyrics
Varushathai Umathu Nanmaiyal Mudi Sutrugirar Umathu Tamil Christian Song Lyrics.
Varushathai Umathu Nanmaiyal Mudi Christian Song in Tamil
வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர்
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது – 2
நீதிமான்களே கர்த்தருக்குள் களி கூறுங்கள் – 2
துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும் – 2
1. சுரமண்டலத்தினால் வீணையினால்
கர்த்தரை துதித்து பாடிடுவோம்
ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க
அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம் – நீதி
2. கர்த்தரின் வார்த்தை உத்தமமும்
உவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய்
அவர் ஆலோசனை நித்திய காலமும்
தலைமுறை தலைமுறையாக நிற்கும் – நீதி
3. கர்த்தரே நமக்கு அடைக்கலமும்
நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம்
நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள்
முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும் – நீதி
