Viswasathal Naamum Lyrics
Viswasathal Naamum Pizhaium Pasumai Tamil Christian Song Lyrics Sung By. Saral Navaroji.
Viswasathal Naamum Christian Song in Tamil
விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம்
பசுமை செழிப்புடன் வாழ்வோம்
ஏசு தேவனை நம்பினோரே
விசுவாசம் எம்மில் கடுகவிருந்தால்
வீழ்த்திடுவோம மலையைக் கடலிலே
உலகை ஜெயித்திடுமே விசுவாசம்
உத்தம இதயத்தில் தங்கும்
1. கர்த்தரைக் கண்டு விசுவாசிப்பதிலும்
காணாமல் நம்பினால் பாக்கியமே
தரிசித்தல்ல வசிக்கும் கர்த்தருக்குள்
தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள்
பரிசுத்தாவியிலே மகிழ்ந்து நாம்
பூரண மகிமை அடைவோம்
2. வீரர்களாக நின்றிடுவோமே
விசுவாச சோதனை நேர்ந்திடினும்
பொன்னைப் போல் நெருப்பில் புடமிட்ட போதும்
புகழ்ச்சி கனம் மகிமை கிடைக்குமே
பரமன் வெளிப்படும் நாளில்
3. ஆபிரகாமில் விசுவாச மார்க்கம்
அந்த அடிச்சுவட்டில் நடப்போர்
வாழ்வினில் நீதி கிறிஸ்துவின் மூலம்
வாக்குத்தத்த ஆசீர்வாத நன்மைகள்
ஜெயத்தின் மேல் ஜெயங்கொண்டு பக்தர்கள்
சந்ததம் சுதந்தரிப்போம்
4. தேவ குமாரன் வந்திடும் நாளில்
தூய விசுவாசத்தோடு பறப்போம்
மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம்
மாளிகையாய் அவர் மேல் இணைந்து நாம்
பரம அழைப்புடனே சீயோனில்
பிதாவின் முகம் கண்டு வாழ்வோம்
Comments are off this post