Paaviye Nee Pogum Pothum Kooda Lyrics
Paaviye Nee Pogum Pothum Kooda Tamil Christian Song Lyrics.
Paaviye Nee Pogum Pothum Kooda Christian Song in Tamil
பாவியே நீ போகும் போது
கூட வருவதென்ன?
கூட வருவதென்ன?
கொண்டு நீ வந்ததென்ன?
1. ஆடு மாடு நன்செய் புன்செய்
வீடுவாசல் தான் வருமோ?
பாடுபட்டு லாயக்காய்
தேடும் பணம் வருமோ?
2. உத்தியோக மதிப்புகளும்
பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும்
மெத்தவே அரையில் கட்டும்
ஆடைகளும் வருமோ?
3. மாயை மாயை மாயை என்று
சொல்லுகிறான் பிரசங்கி
ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார்
ஞானி சாலமோன் தானே
4. தேடு நீ கண்டடைவாய்
தட்டுத் திறப்பேனென்றார்
கேளு கொடுப்பேனென்றார்
கேட்டவரம் தருவார்
