Kartharukku Kathiru – Helen Adaline Song Lyrics
Kartharukku Kathiru Tamil Christian Song Lyrics Sung By. Helen Adaline.
Kartharukku Kathiru Christian Song Lyrics in Tamil
பெலன் இன்றி நிற்கிறாயோ
சோர்வினால் களைக்கின்றாயோ
பெலப்படுத்தும் ஒருவர் உண்டு
சத்துவத்தை பெருக செய்யுவார்
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு
எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
உதவி இன்றி தவிக்கின்றாயோ
ஒருவரும் இன்றி அழுகின்றாயோ
உதவிடும் கன்மலை அவர் தான்
உனக்கொத்தாசை என்றும் அவரே
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு
எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
வேதனை உன்னை ஆளுகின்றதோ
வியாதிகள் உன்னை தாக்குகின்றதோ
சுமந்து செல்லும் தேவன் அவர்தான்
புது பெலன் தந்து தாங்கிடுவார்
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு
எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
