Kannukulla Eeram Christian Song Lyrics

Kannukulla Eeram Tamil Christian Song Lyrics Sung By. Esther Asirvatham.

Kannukulla Eeram Christian Song Lyrics in Tamil

கண்ணுக்குள்ளே ஈரம்
நெஞ்சுக்குள்ளே சோகம்
கஷ்டமெல்லாம் ஏனோ புரியலயே
கண்ண மூடி பார்த்தேன்
கைய தட்டி சிரிச்சேன்
கசப்பா இருக்கும் மறக்கலயே
வழியும் தெரியல குழிக்குள்ளே விழுந்தேன்
வாழ்க்கை புரியல நிம்மதியை மறந்தேன்

எனக்கொரு தேவன் உண்டு
அதை நான் அறிஞ்சேன்
இயேசு தெய்வத்திடம் கஷ்டமெல்லாம்
சொல்லி சொல்லி அழுதேன் – அட
இனிமேல் எப்போவும் நிமிர்ந்து வாழுவேன்

காலையில பாடும் பறவையின் கூட்டம்
படைத்தவர் ஊட்ட பசி ஆறி பறக்கும்
மாலையில வாடும் பூக்களும் கூட
படைத்தவர் போர்த்த பல நிறமாகும்
பறவையும் சாகல பூ நிறம் மாறல
சருவமும் படைச்சவர் பட்சபாதம் காட்டல

எனக்கொரு தேவன் உண்டு
அதை நான் அறிஞ்சேன்
இயேசு தெய்வத்திடம் கஷ்டமெல்லாம்
சொல்லி சொல்லி அழுதேன் – அட
இனிமேல் எப்போவும் நிமிர்ந்து வாழுவேன்

பள்ளத்தாக்கு மேல ஒத்த அடி பாதை
அக்கம் பக்கமெல்லாம் ஆழமாக தெரிய
அதுவே என் வாழ்க்கை பயந்து நான் பார்க்க
கிருபையா அவரே கிட்ட வந்து சேர
பாதம் கல்லில் இடறாமல் தாங்குற தேவனாம்
பத்திரமாய் அணைச்சியே அக்கரைக்கு நடத்துவார்

எனக்கொரு தேவன் உண்டு
அதை நான் அறிஞ்சேன்
இயேசு தெய்வத்திடம் கஷ்டமெல்லாம்
சொல்லி சொல்லி அழுதேன் – அட
இனிமேல் எப்போவும் நிமிர்ந்து வாழுவேன்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post