Immai Kum Marumaikum Andavar Christian Song Lyrics
Artist
Album
Immai Kum Marumaikum Andavar Tamil Christian Song Lyrics Sung By. Samuel.
Immai Kum Marumaikum Andavar Christian Song Lyrics in Tamil
இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து ஒருவரே
எவர் தடுத்தும் எவர் எதிர்த்தும்
எடுத்துரைப்பேன் இயேசுவையே
தான் தங்கும் இடம் ஒன்றில்
நானும் தங்கி இளைப்பாற
தான் முந்தி சென்றாரே
தரணியில் இவர் போல் எவருமில்லை
பாவ உலகை பரிசுத்தமாக்க
பாவமாகி பரிகரித்தார்
ஜீவனை ஈந்து ஜீவனை மீட்ட
ஜீவாதிபதியே இவரானார்
குமாரன் இயேசுவின் நாமத்தையே
குதூகலமாய் கொண்டாடினால்
அமர வாழ்வினை நாம் காண
அனைத்தையுமே செய்துவிட்டார்
பார்தலத்தில் பாடுகள் சகித்து
பரமன் இயேசுவை துதித்து வந்தால்
யார் தடுத்தும் எவர் எதிர்த்தும் ஏகிடுவோம் ஏகம்பரமே
Comments are off this post