En Thanimaiyil En Vaethanaiyil Christian Song Lyrics

En Thanimaiyil En Vaethanaiyil Tamil Christian Song Lyrics From The Album Aasirvatha Ootrae Sung By. Augustin Rajasekar.

En Thanimaiyil En Vaethanaiyil Christian Song Lyrics in Tamil

என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னைத் தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2)

உம்மைப்போல் யாருண்டு
என் நேசரே என் இயேசுவே (4)

1. என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைத்தீரே
என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடு இருக்கின்றீர் (2)

2. தீய மனிதர்கள் என்னை எதிர்த்தாலும்
என் அருகிலே நின்று காத்தீரே
என்னை புரியாமல் பலர் வெறுக்கையில்
நீர் ஒருவரே என்னை அறிவீரே (2)

3. என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்து கொண்டீரே
உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2)

Other Songs from Aasirvatha Ootrae Album

Comments are off this post