Muzhankaal Mudangum Song Lyrics
Muzhankaal Mudangum Tamil Christian Song Lyrics Sung by. James Britto.
Muzhankaal Mudangum Christian Song Lyrics in Tamil
முழங்கால்கள் முடங்கும்
நாவு யாவும் அறிக்கையிடும்
மலை யாவும் அசையும்
உம் மகிமையின் பிரசன்னம் முன் – 2
ஆவியானவரே அக்கினியாய்
என்னை மாற்றும் – 2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும் – 2
1. உமக்காக காத்திருந்து
உம் சாயலை நான் தரித்திட
உம்மைப்போல் மாறிட
என் உள்ளம் ஏங்குதே – 2
ஆவியானவரே இயேசுவைப்போல்
என்னை மாற்றும் – 2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும் – 2
2. உம் சித்தம் செய்திட
உம் அன்பை நான் சொல்லிட
உமக்காக வாழ்ந்திட
என் இதயம் துடிக்குதே – 2
ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே – 2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும் – 2 – முழங்கால்கள்
