Inba Yesuvaiye Thinam Lyrics
Inba Yesuvaiye Thinam Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Inba Yesuvaiye Thinam Christian Song Lyrics in Tamil
இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்
புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
இனிமை சுகமே அளித்தோர் அவரை
பண்பாடி வாழ்த்திடுவேன் – 2
1. கோரத்தின் எல்லைப் புயலினில்
பேரலை வீசும் கடலினில்
மாளும் பாவி என்னைத் தூக்கி
தோளில் தாங்கி கரை சேர்த்தார்
மகிபன் அருளின் வடிவாம் அவரை
மகிழ்வாய் பாடுகிறேன்
2. மாந்தர் கைவிட்ட வேளைதனில்
மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார்
ஜீவ ரத்த மதால் மீட்டார்
தூய வாழ்வு தனைத் தந்தார்
மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில்
மகிழ்வாய் பாடுகிறேன்
3. வானக வேந்தன் என்றென்றுமே
வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே
வான தூதர் போல நானும்
வாழ்வு காண வாக்குத் தந்தார்
வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன்
வல்லோனை வாழ்த்திடுவேன்
