Aadhiyile Dhevan Christian Song Lyrics

Aadhiyile Dhevan Vaanam Boomi Padaithaar Tamil Christian Song Lyrics From the Album Aayathamaa Vol 6 Sung By. Ravi Bharath.

Aadhiyile Dhevan Christian Song Lyrics in Tamil

ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார்
வார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார்
வெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும்
வெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார்
பகலில் சூரியனும் இரவில் சந்திரள்ம்
பச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும்
வானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும்
மண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே
மீட்பீன் செய்தி இதுதானே மாந்தர் தெரிந்துகொள்ளட்டும் – 2

தோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே
ஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே
ஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால்
புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்றாரே
ஆதாமும் ஏவாளும் ஏதேனில் இருந்தனர்
ஆனந்தமாகவே தோட்டத்தில் திரிந்தனர்
அல்பகல் ஆண்டவரை வணங்கி மகிழ்ந்தனர்
அல்லேலூயா என்று ஆர்ப்பரித்து வந்தனர்
ஏதேன் தோட்டத்திலே ஒரு நாள் சாத்தான் நோட்டமிட்டானே – 2

பிசாசு பாம்புக்குள்ளே பாம்பு இப்ப தோட்டத்துள்ளே
ஆதாமை விட்டுவிட்டான் ஏவாளை மடக்கிவிட்டான்
சந்தேகம் கிளப்பிவிட்டான் சிந்தையை குழப்பிவிட்டான்
கட்டளை மறக்கவிட்டான் கனியை புசிக்கவிட்டான்
சாகவே சாவாய் என்று சர்வேஸ்வரன் சொன்னதெல்லாம்
இல்லவே இல்லை என்று பொய்களை பறக்க விட்டான்
வீழ்ந்தான் முதல் மனிதன் அன்று தாழ்ந்தான் அன்றுமுதலாய் – 2

மனிதனுள் பாவம் நுழைஞ்சாச்சு
நன்மை தீமை என்னவென்று தெரிஞ்சாச்சு
நிர்வாணி என்பதை அறிஞ்சாச்சு ஆதாமும் ஏவாளும் விழுந்தாச்சு
பிசாசின் தந்திரம் புரிஞ்சாச்சு பரமனும் மனிதனும் பிரிஞ்சாச்சு
ஆசீர்வாதம் எல்லாமே குறைஞ்சாச்சு
ஆகமொத்தம் எல்லாமே நாசமா போச்சு
பாவத்தை மறைக்க மர இலையா
அது பத்தாது உனக்கு தெரியலையா
தோல் உடை தேவை புரியலையா
அதை தேவன்தான் தரணும் அறியலையா
ஆதாமிடமிருந்து பிள்ளைகளுக்கு
அப்பிள்ளையிடமிருந்து மற்றவருக்கு
இப்படியே பரவுது பாவ அழுக்கு
மனிதனால் தேவனுக்கு பெரும் இழுக்கு
பாவம் பரவுது பரவுது தேவை பரிகாரமே – 2

எத்தனையோ வருஷமா என்னென்னமோ யோசிக்கிறான்
பாவப் பழிபோக்கத்தானே மனுஷன் யாசிக்கிறான்
மலைமேல மண்டியிட்டு மனச சுத்தப்படுத்தி
குகையில உக்காந்து தன்னையே கஷ்டப்படுத்தி
நல்லதெல்லாம் செஞ்சு செஞ்சு தன்னையே திருப்திபடுத்தி
நல்ல எண்ணம் கொண்டு பரலோகம் போகப் பாக்குறான்
தோல்வி படுதோல்வி தான் உன் முயற்சிகள் மேல முக்காடுதான் – 2

கல்லையெல்லாம் தெய்வமாக்கி கண்முழிச்சு பாத்துக்குறான்
கண்டபடி மந்திரம் சொல்லி கர்த்தர ஏமாத்திக்கிறான்
காணிக்கைய கொட்டி கொட்டி பாவங்கள மூடிக்கிறான்
நாலுபேருக்கு நன்மை செஞ்சு நிம்மதிய நாடிக்கிறான்
போ போ என்ன வேணுமோ செய்யி பாவம் தீராதய்யா – 2
போ போ என்ன வேணுமோ செய்யி பரிகாரம் இது இல்லய்யா

உன் சுயநீதியெல்லாம் நாத்தமடிக்குதே உன்
நற்கிரியை எல்லாம் வீண் முயற்சியே உன்
நல்ல எண்ணம் எல்லாம் நகங்கிடுதே உன்
பாவத்துக்கு முன்னாடி பொசுங்கிடுதே
பாவம் நீங்க ரத்தபலி அவசியமே
ஏனென்றால் அதுதான் தேவ சட்டமே
ஆடு மாடு ரத்தமெல்லாம் கொஞ்ச காலமே
மாசற்ற ரத்தம் இங்கு தேவைப்படுதே
மனுஷனுக்காக மனுஷன் மரிக்க கூடுமோ
குருடரை குருடர் வழி நடத்தக்கூடுமோ
உத்தமமா ஒருத்தன காட்டக்கூடுமோ
தன்னை நல்லவன்னு யாராவது சொல்லக்கூடுமோ
அதனால்…

ஆண்டவரே செய்தாரு நல்ல ஏற்பாடு
அதுதானே உன் கையில் புதிய ஏற்பாடு
தன் மகனை தரணியில் தானமாக தந்தாரு
புதல்வனை பாவமெல்லாம் ஏற்றுக்கொள்ளச் சொன்னாரு
கன்னி பெண்ணின் பிள்ளை களங்கமில்லா முல்லை
பரிசுத்தத்தின் எல்லை பிசாசுக்கு தொல்லை
ஏசு அவர் பேரு தாவீதின் வேரு
ஆபிரகாமின் வம்சம் ஆகமொத்தம் அம்சம்
ஞானத்துல தீரன் வல்லமையில் சூரன்
நல்ல உபகாரன் நம்ம யெஷீரன்
அவர் நின்னா அற்புதம் வார்த்தை சொன்னா அற்புதம்
எக்கச்சக்க அற்புதம் எச்சில் கூட அற்புதம்
இயேசு என்ற ஒரே நாமம் பாவம் போக்கிவிடுமே
இயேசு என்ற ஒரே நாமம் பரலோகம் சேர்த்துவிடுமே
மரணத்தை வென்றவரு உயிரோடு வந்தவரு
நித்தியத்த தந்தவரு பரலோகம் சென்றவரு – 2

ஆலோசனை கொடுக்கும் ஆண்டவர் இவரு
அதிசயம் என்பதும் இவரோட பெயரு
வல்லதேவன் நித்திய பிதா சமாதானர் இவர்தான்
இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடுதான்
வழி சத்தியம் ஜீவன் ஜீவனுள்ள தேவன்
விண்ணுலக அப்பம் ஆனாரே வெண்கல சற்பம்
அவரே ஜீவ தண்ணீர் துடைத்திடுவாரே கண்ணீர்
உலகத்திற்கு ஒளி பரலோகத்தின் வழி
ஆடுகளுக்கு வாசல் இல்லென்னா வாழ்க்கை ஊசல்
மேய்ப்பன், திராட்சை செடி பேசினா மின்னல் இடி
போதுமடா வாழ்ந்தது இஷ்டப்படி
மனம் திரும்பாவிட்டால் விழுமே மரண அடி
அவர் முன்னால போடு முழங்கால் படி
சாஷ்டாங்கமா விழு அவர் பாதப்படி

Aadhiyile Dhevan Christian Song Lyrics in English

Aadhiyile Dhevan Vaanam Boomi Padaithaar
Vaarthaiyinaal Ulagathai Vadivamaithaar
Vettaantharaiyaiyum Samuthirangalaiyumi
Vetrikaramagave Vevveraaga Pirithaar
Pagalil Sooriyanum Iravil Chandiranum
Pachal Marangalum Poo Pookum Chedigalum
Vaanathin Patchigalum Matra Vilangugalum
Mannilirindhu Nal Manidhanaiyum Padaithaare
Meetpin Seidhi Idhudhaano Maandhar Therindhukollattum – 2

Thottathile Oru Thottakaaran Polave
Aadhaamai Anaithaiyum Paarthukolla Sonnaare
Aanaalum Nanmai Theemai Kaniyinai Pusithaal
Pusikkum Naalile Nee Saagave Saavaai Endraare
Aadhaamum Yevaalum Yedhenil Irundhanar
Aanandhamaagave Thottathil Thirindhanar
Alpagal Aandavarai Vanangi Magizhndhanar
Alleluyaa Endru Aarparithu Vandhanar
Yedhen Thottathile Oru Naal Saathaan Nottamittaane – 2

Pisaasu Paambukulle Paambu Ippa Thottathulle
Aadhamai Vittuvittaan Yevaalai Madakki Vittaan
Sandhegam Kilappi Vittaan Sindhayai Kuzhappi Vittaan
Kattalai Marakka Vittaan Kaniyai Pusikka Vittaan Talai Maral
Saagave Saavaai Endru Sarvesvaran Sonnadhellaam
Illaive Illai Endru Poigalai Parakka Vittaan
Veezhndhaan Mudhal Manidhan Andru Thaazhndhaan Andru Mudhalaai – 2

Manidhanul Paavam Nuzhainjaachu
Nanmai Theemai Enna Vendru Therinjaachu
Nirvaani Enbadhai Arinjaachu Aadhaamum Yevaalum Vizhundhaachu
Pisaasin Thandhiram Purinjaachu Paramanum Manidhanum Pirinjaachu
Aaseervaadham Ellaame Kuranjaachu
Aaga Motham Ellaame Naasamaa Pochu
Paavathai Maraikka Mara Ilaiyaa
Adhu Pathaadhu Unakku Theriyalaiyaa
Thol Udai Thevai Puriyalaiyaa
Adhai Dhevan Thaan Tharanum Ariyalaiyaa
Aadhaamidam Irundhu Pillaigalukku
Appillayidam Irundhu Matravarukku
Ippadiye Paravudhu Paava Azhukku
Manidhanaal Dhevanukku Perum Izhukku
Paavam Paravudhu Paravudhu Thevai Parigaarame – 2

Ethanaiyo Varushamaa Ennennamo Yosikiraan
Paavapazhi Pokkathaane Manushan Yaasikiraan
Malamela Mandiyittu Manasa Suthapaduthi
Kugaiyila Ukkaandhu Thannaiye Kashtapaduthi
Nallathellaam Senji Senji Thannaiye Thrupthipaduthi
Nalla Ennam Kondu Paralogam Poga Paakkuraan
Tholvi Padutholvi Thaan Un Muyarchigal Mela Mukkaaduthaan- 2

Kallaiyellaam Dheivamaakki Kanmuzhichu Paathukuraan
Kandapadi Mandhram Solli Karthara Yemaathikiraan
Kaanikkai Kotti Kotti Paavangala Moodikkiraan
Naalu Perukku Nanma Senji Nimmadhiya Naadikiraan
Po Po Ennavenumo Seiyyi Paavam Theeraadhaiyaa – 2
Po Po Ennavenumo Seiyyi Parigaaram Idhu Illaiyaa

Un Suyaneedhi Ellaam Naathamadikudhe – Un
Narkiriyai Ellaam Veen Muyarchiye – Un
Nalla Ennam Ellaam Nasungidudhe – Un
Paavathukku Munnaal Posungidudhe
Paavam Neenga Raththa Bali Avasiyame
Yenendraal Adhudhaan Dheva Sattame
Aadu Maadu Raththamellaam Konja Kaalame
Maasatra Raththtam Ingu Thevai Padudhe
Manushanukkaaga Manushan Marikka Koodumo
Kurudarai Kurudar Vazhi Nadatha Koodumo
Uthamamaa Oruthana Kaattakoodumo
Thannai Nallavannu Yaaravadhu Sollakoodumo
Adhanaala…

Aandavare Seidhaaru Nalla Yerpaadu
Adhudhaane Un Kaiyil Pudhiya Yerpaadu
Than Maganai Tharaniyil Thaanamaaga Thandhaaru
Pudhalvanai Paavamellaam Yetru Kolla Sonnaaru
Kanni Pennin Pillai Kalangamillaa Mullait
Parisuthathin Ellai Pisaasukku Thollai
Yesu Avar Peru Dhaaveedhin Veru
Aabiragaamin Vamsam Aagamotham Amsam
Nyaanathula Theeran Vallamaiyil Sooran
Nalla Ubagaaran Namma Yeshooran
Avar Ninnaa Arpudham Vaarthai Sonnaa Arpudham
Ekkachakka Arpudham Yechil Kooda Arpudham
Yesu Endra Ore Naamam Paavam Pokki Vidume
Yesu Endra Ore Naamam Paralogam Serthuvidume
Maranathai Vendravaru Uyiroda Vandhavaru
Nithiyathai Thandhavaru Paralogam Sendravaru – 2

Aalosanai Kodukkum Aandavaru Ivaru
Adhisayam Enbadhum Ivaroda Peyarul
Valladhevan Nithya Pidha Samaadhaanar Ivarthaan
Immanuvel Endraal Dhevan Nammodu Thaan
Vazhi Sathyam Jeevan Jeevanulla Dhevan
Vinnulaga Appam Aanaare Vengala Sarpam
Avare Jeeva Thanneer Thudaithiduvaare Kanneer
Ulagathirku Oli Paralogathin Vazhi
Aadugalukku Vaasal Illenna Vaazhkai Oosal
Meyppan Dhraatchai Chedi Pesinaa Minnal Idi
Podhumada Vaazhndhadhu Ishtapadi
Manam Thirumbaa Vitaal Vizhume Marana Adi
Avar Munnaala Podu Muzhangaal Padi
Saashtaangamaa Vizhu Avar Paadhapadi

Keyboard Chords for Aadhiyile Dhevan

Other Songs from Aayathamaa Vol 6 Album

Comments are off this post