Aaviyodum Unmaiyodum Lyrics
Artist
Album
Aaviyodum Unmaiyodum Tamil Christian Song Lyrics Sung By. Selva Kumar.
Aaviyodum Unmaiyodum Christian Song in Tamil
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே
1. நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
கர்த்தரில் களிகூருவோம்
பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
பாதம் பணிந்திடுவோம்
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்
பரிசுத்தம் எல்லையில்லையே
2. ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன்
என்று சொல்லுங்களே
அவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
துதிபலிகளை செலுத்துங்களே
3. உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒரு மனமாய்
பாடி புகழ்ந்திடுவோம்
அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்
Comments are off this post