Anbu Neriantha Pon Yesuvae Christian Song Lyrics

Anbu Neriantha Pon Yesuvae Tamil Christian Song Lyrics.

Anbu Neriantha Pon Yesuvae Christian Song Lyrics in Tamil

அன்பு நிறைந்த பொன் இயேசுவே
உம் பாத சேவை என் ஆசையே

1. ஜீவனற்ற பாவி என்னில்
ஜீவனை ஈந்த என் இயேசுவே
உம்மை விட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்

2. என்னுள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

3. இவ்வுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலங்களை நான் காண்பேனே

4. உன்னதத்தை விட்டிறங்கி
மண்ணில் வந்த என் நாதனே
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

5. பாவச் சேற்றில் மோசம் போன
என்னையும் தேடி வந்தீரே
நன்றியினால் எந்தனுள்ளம்
பொங்கி வழியுதே நல்ல நாதா

Advertisement