Arunothayam Ezhunthiduvom Song Lyrics
Artist
Album
Arunothayam Ezhunthiduvom Tamil Christian Song Lyrics Sung By. Sadhu Yesudasan.
Arunothayam Christian Song in Tamil
அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவைத் துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்.
1. இதைப் போன்றொரு அருணோதயம்
எம்மைச் சந்திக்கும் மனமே
ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்
எந்தன் நேச ரெழும்பும் நாள்.
2. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாம் மேசு காருண்யம்
ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்
3. போன ராவினில் ஜீவித்தோர் பலர்
லோகம் விட்டுமே போய் விட்டார்
ஆயினும் நமக்கிந்தத் தினமும்
தந்த நேசரைத் துதிப்போம்
4. ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆயென் நேசரோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்
5. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாறே னென் துக்கம்
பாசமா யங்கு தீர்த்திடும்
Comments are off this post