Ellame Unga Kirubai Christian Song Lyrics

Ellame Unga Kirubai Tamil Christian Song Lyrics Sung By. Haggai Vijaykumar.

Ellame Unga Kirubai Christian Song Lyrics in Tamil

பாவியாக இருந்த நான் பரிசுத்தமானது
எல்லாமே உங்க கிருபை (ஐயா)
எல்லாமே உங்க கிருபை
துரோகியாக இருந்த நான் துதிப்பாடி மகிழ்வது
எல்லாமே உங்க கிருபை (ஐயா)

உங்க கிருபை ரொம்ப நல்ல கிருபை
நம்பி வந்தோரை வாழ வைக்கும் கிருபை (2)

1. பாவி என் மேல் பாசம் வைத்து நீங்கிடாத நேசம் வைத்தீர்
நானோ உம்மை தேட வில்லை
நீர்தான் என்னை தேடி வந்தீர் (2)

என்ன கைமாறு செய்தாலும் போதாதையா
நான் உங்களுக்கு பட்டக்கடன் தீராதைய்யா (2)

உயிரோடு உள்ளவர அப்பா உன் புகழ பாடிடுவேன்
என் ஆயுள் காலம் வர அப்பா உமக்காய் வாழ்ந்திடுவேன் (2)

2. உலகின் அன்பு போதைக்கொண்டு
பாதை மாரி போனேனைய்யா
மனிதர் அன்பில் மயக்கம் கொண்டு
உந்தன் அன்பை மறந்தேனய்யா (2)

நல்ல வேலையில் என்னை நீர் தேடிவந்தீர்
நான் கேட்காமலே புது வாழ்வு தந்தீர் (2)

நீர் செய்த நன்மைகளை அப்பா நெனச்சி பார்க்கலை
எப்படி நன்றி சொல்வேன்
என்ன செய்வேனோ புரிய வில்லை (2)

3. சோர்ந்து போன நேரமெல்லாம்
உங்க கிருபை தாங்கினதே
தள்ளப்பட்ட நேரமெல்லாம்
உங்க கிருபை தூக்கினதே (2)

உங்க அன்பை நான் ஒருபோதும் மரவேனைய்யா
அதை மறந்தால் நான் உயிர் வாழ முடியதையா (2)

உன் அன்பு போதுமய்யா
எனக்கு வேர‌ன்பு வேண்டாமையா
உயிர் உள்ள நாட்களெல்லாம்
நான் உமக்காய் வாழ்வேனையா

Advertisement