En Iyaesuvin Santhnithiyil Lyrics
En Iyaesuvin Santhnithiyil Tamil Christian Song Lyrics.
En Iyaesuvin Santhnithiyil Christian Song in Tamil
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதை
துதி கீதங்கள் பாடிடுவேன்
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லா பாவங்கள் அகன்றிடுமே
2. பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே
