En Mun Sellum Christian Song Lyrics

En Mun Sellum Tamil Christian Song Lyrics Sung By. J. Jeyasingh.

En Mun Sellum Christian Song Lyrics in Tamil

என் முன் செல்லும் என் தேவன் இருக்க
கவலை எனக்கில்லையே
என் கூட வரும் என் தேவன் நடத்த
பயமே எனக்கில்லை

அவர் விட்டு விலகுவதில்லை
என்னைக் கைவிடுவதில்லை
கலங்குவதில்லை நான் தியங்குவதில்லை
கரையவர் சேர்த்திடுவார்

1. செங்கடல் பலமாய் எதிர்த்திடும் போது
வார்த்தையைத் தந்தவர் கூட வருவார்
யோர்தான் தடையாய் வந்திடும் போது
நம்பிக்கைத் தந்தவர் கரம் கொடுப்பார்

2. எரிகோ எதிராய் நின்றிடும் போது
தகர்த்திடும் இயேசு என்னோடிருப்பார்
கோரமாய் சூழ்நிலை மாறிடும் போது
ஆதரவாய் அவர் நின்றிடுவார்

3. அக்கினி நடுவிலே தள்ளப்படும் போது
அக்கினி மதிலாய் சூழ்ந்திடுவார்
தனிமையில் வேதனையில் தவித்திடும் போது
திடனாய் இயேசு என்னோடிருப்பார்

Advertisement