En Nesar Varukintar Lyrics
En Nesar Varukintar Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
En Nesar Varukintar Christian Song Lyrics in Tamil
என் நேசர் வருகின்றார்
நல் ஆசி தருகின்றார்
என் வேதனைகள் போக்கிடுவார்
என்னை மார்போடு அணைத்திடுவார்
1. கொடிய பாவ இருளினின்று
தவித்து என்னைக் காக்கின்றார்
தேவனே என் ஜீவனே
பாருமே அப்பா பாருமே
2. மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே
முன் வந்து என்னைப் பாருமே
எல்லாம் வல்ல இறைவனே
வாருமே ஆசை தாருமே
3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும்
கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே
தூதர்கள் போற்றும் தூய தேவா
துதியின் தேவனே வாருமே
