En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics

En Ullathai Kavarntha Oruvar Undu Tamil Christian Song Lyrics Sung By. Dr. Rani Jeyachandran.

En Ullathai Kavarntha Oruvar Undu Christian Song in Tamil

என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் இதயத்தை அவருக்கே பறிகொடுத்தேன்
இனி நானல்ல அவரே எல்லாம்
அவர்தான் என் நேசர் இயேசு

1. மனம் போல அலைந்தேன்
உலகை ரசித்தேன் நிம்மதி காணவில்லை
என் இயேசு என்னைத் தேடி வந்தார்
நிம்மதி கண்டுகொண்டேன்

2. இளமையும் அழகும் தேவையென்று
மாயையை பின்பற்றினேன்
என் வாலிபம் எல்லாம் மாயை என்று
அறிந்தேன் இயேசுவினால்

3. மனித அன்பு ஒன்றே போதும் என்றேன்
உண்மையை காணவில்லை – என்
இயேசுவின் அன்பு உண்மை என்று
கண்டுகொண்டேன் வாழ்வில்

4. என் இயேசு எந்தன் வாழ்வில் வந்தார்
புது சிருஷ்டியானேன் – என்
இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்
நியமிக்கப்பட்டு விட்டேன்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post