Ennullae Vaarumae Lyrics
Ennullae Vaarumae Song Lyrics in Tamil
என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)
இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே
என் பாவங்கள் குற்றங்கள் யாவும்
மறைவான சிந்தனை யாவும் மாறா
உம் அன்பினாலே மறந்தவரே (2)
தேடியும் யாரும் இல்லையே
தேற்றுவோர் தோளும் இல்லையே (2)
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே
எதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்
ஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)
ஒருவரே என் சுவாசம்
ஒருவரே எதிர்காலமே (2)
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)
இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)
இயேசுவே இயேசுவே…
Comments are off this post