Ezhumbi Prakasi – Joseph Aldrin Song Lyrics

Ezhumbi Prakasi Tamil Christian Song Lyrics Sung By. Joseph Aldrin.

Ezhumbi Prakasi Christian Song in Tamil

எழும்பி பிரகாசி என் மகனே(ளே)
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது

நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
அலங்கரிப்பாரே உன்னை

சூரியன் வெளிச்சம் தரவில்லையோ
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
தேவனே உனக்கு மகிமை

பூமியையும் இருள் மூடியதோ
ஜனங்களை காரிருள் மூடியதோ
மகிமை உன்மேல்
வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்

எழும்பி பிரகாசி எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது

Advertisement