Immattum Jeevan Thantha

Immattum Jeevan Thantha Song Lyrics in English

Immattum jeevan thantha karththaavai aththiyantha
Ennnamaayth thoththarippomaaka – 2

Nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu – 2
Narsukam maevavum arputhamaakavum – 2 – Immattum…

1. Kaalamsol pol kaliyum, thannnneeraippol vatiyum,
Kanaavaip polaeyum oliyum
Vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum,
Mannnin vaal vontum nirka maattathu
Kolap pathumaikkum, neerka kumilikkum, pukaikkumae – 2
Konnda ulakaththil anndaparan emaik
Kanndu karunnaikal vinndu thayavudan. – Immattum…

2. Palavitha ikkattayum thikilkalaiyum kadanthom
Parama paathaiyaith thodarnthom
Valiya theemaiyai ventom , naliyum aasaiyaik kontom,
Vanjar pakaikkum thappi nintom
Kalienta thellaam vinntoom , karththaavin meetpaik kanntoom – 2
Kaayntha manathodu paaynthuvilu kanam
Saaynthu kedavum aaraaynthu neriyudan – Immattum…

3. Sanasetham varuvikkum , kaedukatkor mutivu
Thanthu, norunginathaik kattik
Kana sapaiyai aatharith thanpaay aaseervathiththuk
Kannnnokki ellaarmael antantu
Thinamum arul uthikkach seythu , thamathu thaeva – 2
Sinthai yinodathi vinthaiyathaay uyir
Mainthanaal engalai intha vinothamaay – Immattum…

Immattum Jeevan Thantha Song Lyrics in Tamil

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக – 2

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து – 2
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் – 2 – இம்மட்டும்…

1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே – 2
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும்…

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம்,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் – 2
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும்…

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ – 2
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் – இம்மட்டும்…

Keyboard Chords for Immattum Jeevan Thantha

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post