Inba Kananuku Song Lyrics
Inba Kananuku Aalai Solla Tamil Christian Song Lyrics.
Inba Kananuku Christian Song in Tamil
இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
1. பரம சுகங்களின் இனிய ரசம்
பரம ராஜனோடு பானம் செய்வேன்
2. பரம பிதா எந்தன் கண்ணின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்
3. சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே
4. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது
5. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே!
6. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே
7. பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி
பள பளென் றொழுகிடும் தேசமது
