Jillendru Christmas Song Lyrics

Jillendru Tamil Christmas Song Lyrics.

Jillendru Christian Song Lyrics in Tamil

ஜில்லென்று காற்று வீச
வெண்பனி வந்து தூவ
பாரினிலே பாவம் போக்க
பாலகனாய் வந்துதித்தார்

வானத்து விளக்காய்
வாழ்வின் ஒளியாய்
விண்ணை விட்டு மானிடராய்
மண்ணில் உதித்தார்
கிற்ஸ்மஸ் வாழ்த்துப் பாடிடுவோம்
அன்பை உலகெங்கும் சொல்லிடுவோம்

நிந்தைகள் போக்க
கந்தை கோலம் எடுத்தார்
விந்தையாக வந்து எந்தன்
சிந்தை குளிர செய்தார்
இயேசு பாலனை வணங்கிடுவோம்
கிறிஸ்மஸ் வாழ்த்துப் பாடிடுவோம்

எக்காளம் ஊத
விண்ணில் வரும் இயேசு
நம்மிலே பிறக்க
நம் உள்ளம் கொடுப்போம்
கிறிஸ்மஸ் வாழ்த்துப் பாடிடுவோம்
விண்ணிலே அவரோடு வாழ்ந்திடுவோம்

Advertisement