Jim Reeves Herald – Arugile En Arugilae Song Lyrics

Arugile En Arugilae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.Jim Reeves Herald

Arugile En Arugilae Christian Song Lyrics in Tamil

அருகிலே என் அருகிலே
உயர் அலைகளின் நடுவினிலே
துயரத்தின் மிக ஆழத்தில்
அரவணைத்திடும் பெலனும் நீர்

உயிரே என் உயர் மலையே
உயிர் தந்த என் உறைவிடமே
உயிர் அணுவாக இருந்த என்னை
உயர் சிகரத்தில் வைத்தவரே

பெரியவர் மிகவும் பெரியவர்
என் நினைவிலும் மிகவும் பெரியவர்
சிறந்தவர் மிகவும் சிறந்தவர்
சிறந்ததை எனக்கு தருபவர்

1.கருவிலே என்னை கண்டதினால்
மதில்களை நீர் உடைக்க செய்தீர்
எதிரிலே நின்ற செங்கடலை
நடந்து கடந்து ஜெயம் எடுத்தேன்
நதியாக மேற்கொள்ள நினைத்த
நயமான வஞ்சகம் எல்லாம்
வழி மாறி சென்றிட செய்தீர்
தலை உயர்த்தி நடக்க செய்தீர்

2.நெருக்கினாலும் என்னை வளர செய்வீர்
ஒடுக்கினாலும் என்னை பெருக செய்வீர்
தடுத்திட்டாலும் முன்னேற செய்வீர்
எதிர்த்து நடந்து சுதந்தரிப்பேன்
குறையாத நன்மையை காண்பேன்
கரையாத கிருபையை உணர்வேன்
நினையாத உயரங்கள் அடைவேன்
கிரகிக்க முடியா வாழ்வளித்தீர்

Arugile En Arugilae Christian Song Lyrics in English

Arugile en arugile
Uyar elaigalin naduvinile
Thuyaraththin miga zzhaththil
Aravanaiththidum pelanum neer

Uyire en uyar malaiye
Uyir thantha en uraividame
Uyir anuvaaga iruntha ennai
Uyar sigaraththil vaiththavare

Periyavar migavum periyavar
En ninaivilum migavum periyavar
Siranthavar migavum siranthavar
Siranthathai enakku tharupavar

1.Karuvile ennai kandathinaal
Mathilgalai neer udaikka seitheer
Ethirile nindre sengadalai
Nadanthu kadanthu jeyam eduthen
Nathiyaga merkolla ninaiththa
Nayamaana vanchagam ellam
Vazhi maari sendrida seitheer
Thalai uyarththi nadakka seitheer

2.Nerukkinalum ennai valara seiveer
Odukkinalum ennai peruga seiveer
Thaduththittalum munnerea seiveer
Ethirththu nadanthu suthantharippen
Kuraiyatha nanmaiyai kanpen
Karaiyatha kirupaiyai unarven
Ninaiyatha uyarangal adaiven
Kirakikka mudiyaa vaazhvaliththeer

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post