Kaakum Karam Christian Song Lyrics

Kaakum Karam Tamil Christian Song Lyrics Sung By. Angelena Mathias.

Kaakum Karam Christian Song Lyrics in Tamil

காக்கும் கரமது, தூக்கி சுமக்குது எனை
பாதுகாக்குதே, எனை பறந்து காக்குதே (2)

கருத்தாய் அணைக்கும் நேசமது,
கருவில் கண்ட (என்) நேசமது (2)
வாழுவேன், உமக்காக என்றுமே,
ஜீவிப்பேன், உயிருள்ள நாளெல்லாம் (2)

1. என்னை விட்டு விலகிடாத நல்ல பங்கு நீரே,
என்னை விட்டு விலகவில்லையே (2)
தகப்பன், தோள் மேல சுமப்பது போல் சுமக்கும் தெய்வமே,
தோள் மேல சுமப்பது போல் சுமக்கும் தெய்வமே,
அகலா அன்பு இயேசுவே, என்
அகலா அன்பு இயேசுவே

2. தள்ளப்பட்ட இடத்தில் என்னை தாங்கி தாங்கி நடத்தினீர்,
தள்ளாட விடவில்லையே (2)
உள்ளங்கையில் வரைந்து என்னை நினைக்கும் தெய்வமே,
உள்ளங்கையில் வரைந்து என்னை நினைக்கும் தெய்வமே
உங்க அன்பு விந்தை இயேசைய்யா,
உங்க அன்பு விந்தை இயேசைய்யா

Advertisement