Karthave Neer Ennai Lyrics
Karthave Neer Ennai Tamil Christian Song Lyrics Sung By. Rev. N. Johnson.
Karthave Neer Ennai Christian Song in Tamil
கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்
நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2
சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்
உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2
கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்
நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்
1. என் கால்கள் சறுக்கும் முன்னே
நீர் என்னைத் தாங்குகிறீர் – 2
மானானது நீரோடையை – 2
வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன்
2. மானிடரின் வேஷங்களை
மாற்றும் உம் நேசம்தனை – 2
உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2
உமதாவியால் என்னை நிரப்பிடும்
3. உம் உள்ளம் உடையப்பண்ணும்
பாவங்கள் என்னில் உண்டோ – 2
புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2
பரிசுத்த வழியிலே நடத்திடும்
