Kupaiyil Irrunthu – Reegan Gomez Song Lyrics

Kupaiyil Irrunthu Tamil Christian Song Lyrics Sung By. Reegan Gomez.

Kupaiyil Irrunthu Christian Song Lyrics in Tamil

குப்பையிலிருந்து உயர்த்தினீரையா
குழந்தையைப்போல உள்ளம் மாற்றினீரையா (2)
குருவே என் இயேசுநாதா
குறைவின்றி என்னைக் காக்கும் தேவா (2)

1. தாழ்மையில் இருந்தேன் தகப்பன் நினைத்தீர் (2)
தயவுள்ள கரங்களால் என்னை அணைத்தீர் (2)

உமது அன்பிற்கு அளவேயில்லையே
உமது அன்பிற்கு முடிவேயில்லையே (2)

2. அநாதி ஸ்நேகம் என் மீது வைத்தீர் (2)
அன்பைப் பொழிந்தீர் ஆசீர்வதித்தீர் (2)

3. சொல்லவும் முடியாது எண்ணவும் முடியாது (2)
அப்பா நீர் என்மீது காண்பித்த தயவுகளை (2)

4. கண்ணீரைக் கண்டீர் கதறலைக் கேட்டீர் (2)
கிருபையினாலே கைதூக்கி எடுத்தீர் (2)

5. குற்றங்களை மன்னித்தீர் இரத்தத்தால் கழுவினீர் (2)
வற்றாத நதியாக உள்ளத்தில் வந்தீர் (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post