Mannipu Mannipu Christian Song Lyrics

Mannipu Mannipu Mannipu Deva Tamil Christian Song Lyrics From the Album Tamil Songs Vol 6 Sung By. D.G.S. Dhinakaran.

Mannipu Mannipu Christian Song Lyrics in Tamil

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்புத் தாருமே – இறைவா
மன்னிப்புத் தாருமே – இறைவா

1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்
மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் – நேரில்
வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்

2. என் சொத்தை தந்திடும் என்று கேட்டான்
தன் சொத்தைப் பெற்றவன் பயணமானான்
தன் இஷ்டம் போலங்கே செலவு செய்தான் – அவன்
தன் வாழ்வைப் பாவத்தில் மூழ்கடித்தான்

3. பன்றிகள் மேய்த்தவன் தவிடு உண்டான்
தன் தந்தை அன்பினைக் கனவு கண்டான்
மன்னிப்பு கேட்டங்கே ஓடிவந்தான் – தந்தை
மன்னித்து மகனாக அணைத்து ஏற்றார்

4. ஆண்டவர் ஞானத்தில் இனிமையுண்டு
கண்டிக்க காலத்தைக் கடத்துகின்றார் கண்டித்து
கருணைசொல் கூறுகின்றார் – பாவி
திருந்திட அருட்கொடை வழங்குகின்றார்

5. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தால் – தேவன்
குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்!

Mannipu Mannipu Christian Song Lyrics in English

Mannipu Mannipu Mannipu Deva
Mannipu Mannipu Tharumae – Iraiva
Mannipu Tharumae Irava

1. Aandavar Aanmavai Virumbukindraar
Maanitta Aanmavai Thedugindrar
Aandidum Paaviku Arulugiraar – Neril
Vendidum Throgiku Erangukindraar

2. En Sondhathai Thnadhidum Endru Ketan
Than Sondhathai Petravan Payanamaanan
Than Istatham Polangae Selavu Seidhan – Avan
Than Vaazhvai Paavathil Muzkadithan

3. Pandrigal Meithavan Thavidu Undaan
Than Thanthai Anbinai Kanavu Kandan
Mannipu Ketankae Oodi Vandhan – Thanthai
Manithu Maganaga Anaithu Etraar

4. Aandavar Gnanathil Inimaiyudan
Kandika Kaalathai Kadathugindraar
Kandithu Karunaisol Koorugindraar – Paavi
Thirundhida Arutkodai Vazangugindraar

5. Kutrangal Illayae Endru Sonal
Nanmaidhan Emattri Nalindhiduvom
Kutrangal Anaidhaiyum Eduthuraithal – Deva
Kutrathai Manithu Vaazhvalipaar

Keyboard Chords for Mannipu Mannipu

Other Songs from Tamil Songs Vol 6 Album

Comments are off this post