Meipanin Kural Ketkkum Song Lyrics
Artist
Album
Meipanin Kural Ketkkum Tamil Christian Song Lyrics Sung By. Dr. Clifford Kumar.
Meipanin Kural Ketkkum Christian Song in Tamil
மேய்ப்பனின் குரல் கேட்கும்
சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே
அழுகையின் குரல் கேட்டு
என்னை தேடி வந்தார் இயேசு ராஜன்
1. புதரில் சிக்குண்டேனே
பயந்து நான் நடுங்கினேனே
அழைத்தார் என்னை அன்றே
அன்பரின் குரல் கேட்டேன்
2. கீழ்ப்படியாமல் ஓர் நாள்
ஓடி ஓடி ஒளிந்தேனே
தேடி வந்து என்னை பிடித்தார்
தற்பரன் இயேசு ராஜன்
3. ஓநாய் ஓர் நாள் என்னை
பின் தொடர்ந்து முன் வந்ததே
விலக்க என் கோலுமானார் – என்னை
விடுவிக்கும் தடியுமானார்
4. அன்பரின் குரல் கேட்ட
நல்ல ஆட்டுக் குட்டியாம் நானே
அடங்கி நடப்பேனே
அவர் தோளில் இருப்பனே
Comments are off this post