Mudhalaga Mudhalaga Christian Song Lyrics
Mudhalaga Mudhalaga Tamil Christian Song Lyrics Sung By. J.Allen Paul.
Mudhalaga Mudhalaga Christian Song Lyrics in Tamil
முதலாக முதலாக தேவனைத் தேடிடு
பின்பு எல்லாம் கூடக்கிடைத்திடும்.
உன் தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க செய்குவார்
உன் கூடைகளை நிரம்ப செய்குவார்
உன் தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க செய்குவார்
உன் களஞ்சியத்தை நிரம்ப செய்குவார்-2
1. என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம்
என்னத்தை உடுப்போம் என்று
உலகம் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கு
அஞ்ஞானி போல நீயும் அதனைத் தேடாதே
கர்த்தரைத் தேடிடு
இதெல்லாம் கூடக் கிடைத்திடும்
2. சுகபோகமாய் சிற்றின்பம் தேடி பணப்பிரியராக
வாழுவோரின் மத்தியிலே தானே
சுய வெறுப்போடு நீயும் நடந்து கொண்டிரு
கர்த்தரின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.
3. உனக்காக ஜீவன் தந்த கிறிஸ்துவிடம்
மெய்யாக அன்பு கூர்ந்திடு
உலக நன்மைக்காக மட்டும் தேவனைத் தேடாதே
கர்த்தரின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.
Comments are off this post