நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்
யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்
1. சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்
2. கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்
3. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து
Comments are off this post