நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2)
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்(2)
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(2)
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே(2)
என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா(2)
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா(2)
என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா(2)
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா(2)
Comments are off this post