Neer Vantha Neram – Wilfin John Song Lyrics

Neer Vantha Neram Tamil Christian Song Lyrics Sung By. Wilfin John.

Neer Vantha Neram Christian Song Lyrics in Tamil

நீர் வந்த நேரம் மேகங்கள் கூட்டம்
மழைச்சாரல் கொட்டும் மண்வாசமே
நீர் வந்த நேரம் விண்மீன்கள் கூட்டம்
வெட்கத்தில் மறையும் விடியல் வரும்
நீர் வந்த நேரம் சூரியன் தளர
பிறைத்தேடும் நிலவு குளிர் வீசுமே

உயிரே உயிரே என் இயேசுவே
இமைப்பொழுதும் பிரியாத பேசும் உயிரே
நினைத்திடும் நேரத்தில் நாடி நரம்பனைத்திலும்
பாய்ந்தோடுதே உம் நினைவே

பனி பெய்யும் இரவில் நடுங்கிடும் குளிரில்
பிளவுண்ட மலையாய் நீர் வந்தீரே
புயல் வீசும் கடலில் பாய்ந்திடும் அலையில்
உயிர் காக்கும் படகாய் நீர் வந்தீரே
கலங்கரை தீபம் போல் வழிகாட்டும் ஒளியே
கண்ணிமைக்கும் நேரத்தில் கரைசேர்த்தீரே
கோரமம் சீற்றத்தில் நங்கூரமாய் நீர் வந்தீரே

காயங்கள் கண்ட என் ரணமான மனதை
குணமாக்கும் மருந்தாய் நீர் வந்தீரே
கண்முன்னே நின்ற என் கனமான நினைவை
லகுவாக மாற்ற நீர் வந்தீரே
என்னுள்ளே ஏதோ அனல் பாயும் உணர்வும்
மெய்சிலிர்க்கும் மகிழ்ச்சியும் நீர் தந்தீரே
துன்பமாம் வாழ்வினில் இன்பராக நீர் வந்தீரே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post