Neerae Karthar – Nigel Solomon Song Lyrics
Neerae Karthar Tamil Christian Song Lyrics Sung By. Nigel Solomon.
Neerae Karthar Christian Song Lyrics in Tamil
உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும்
உம் ஆவியின் வல்லமையால் காலூன்றி
சேனையாய் எழும்பி நிற்கும்
உம் வார்த்தையின் அதிகாரத்தால்
சுகவீனங்கள் சுகமடையும்
ஆழமான உம் தழும்புகளால்
பெலவீனங்கள் பெலனடையும்
உம் பரிபூரண பெலத்தால்
நீரே கர்த்தர் நீரே கர்த்தர்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
நீரே கர்த்தர் நீரே கர்த்தர்
மனநிறைவோடு உயர்த்திடுவேன் – 2
1. சிங்க கெபிக்குள் விழுந்தாலும்
அக்கினி சூலையில் நின்றாலும்
சத்துரு சேனையாய் சூழ்ந்தாலும்
எரிகோவின் மதில்கள் தடுத்தாலும்
என்னை காப்பவர் நீர்தானையா
துணையாய் நிற்பவர் நீர்தானையா
யுத்தத்தில் கேடகம் நீர்தானையா
தடைகளை தகர்பவர் நீர்தானையா
2. நம்பிக்கை இல்லா வேளையில்
நீர் தான் எனது நம்பிக்கையே
கைவிடப்பட்ட காலங்களில்
உம் நீதியின் வளக்கரம் தாங்கியதே
உம்மை கூப்பிடும் யாவருக்கும்
செவியை அடைக்காமல் திறப்பவரே
உம்மை தேடிடும் யாவரையும்
கண்களில் கனிவோடு காண்பவரே
Comments are off this post