Neesanam Ennaium – Pr.Suresh Jebaraj Song Lyrics

Neesanam Ennaium Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Suresh Jebaraj

Neesanam Ennaium Christian Song Lyrics in Tamil

நீசனாம் என்னையும் நித்தமும்
நடத்திடும் கர்த்தாதி கர்த்தா
சுவாசமுள்ள யாவும் துதிக்க
பாத்திரர் நீர் தானய்யா!

நேற்றும் இன்றும் என்றும் மாறா
எந்தன் துதி நாயகனே
உந்தன் நாமம் வாழ்கவென்று போற்றிடுவேன்!

என்னை விட்டு விலகாதவர்- கைவிடாதவர்
என்னை என்றும் மறவாதவர்
விட்டுக் கொடுக்காதவர் (2)

அல்லேலுயா ஆமென் அல்லேலூயா!(2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா!(2)

1.வாக்குதத்தம் செய்தவரே வாக்கு மாறா வல்லவரே
வார்த்தைகளில் உண்மையுள்ள தெய்வம் நீரே
சேற்றினின்று தூக்கினீரே சிறியவனை உயர்த்தினீரே
உந்தன் நாமம் மகிமைப்பட செய்தவரே(2)
என் நாவு என் பகைவர்மேல் திறந்ததே
என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்ததே!

2.அன்பில் பரிசுத்தவனாய் குற்றமில்லாதவனாய்
கிறிஸ்துவுக்குள் வாழ்ந்திட தெரிந்தவரே
நற்கிரியைகள் நான் செய்ய கிறிஸ்துவுக்குள் எனை
படைத்து உந்தன் செய்கையாக என்னை வைத்தவரே
சீயோனின் மூலைக்கல்லே உம்மை நம்பிடுவேன்
சீயோனின் ராஜா நீரே சீயோனில் ஆட்டுக்குட்டியே
ஜெயம் பெற்றவரே சீயோனின் அதிபதியே

3.சத்துருக்களின் முன்பாக நித்தம் ஒரு பந்தியை
நீர் ஆயத்தம் பண்ணினதால் வெட்கமடையேன்
என் தலையை எண்ணயினால் அபிஷேகம் பண்ணுகிறீர்
என் பாத்திரம் நிரம்பிட செய்கின்றீர்
என் ஜீவ நாட்களெல்லாம் நன்மைக் கிருபை
என்றும் என்னைத் தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாள் நான் நிலைத்திருப்பேன்
என்றும் உம்மோடிருப்பேன் களிகூர்ந்திடுவேன்!

Neesanam Ennaium Christian Song Lyrics in English

Neesanam ennaiyum niththamum
Nadaththidum karththaathi karththaa
Suvaasamulla yaavum thuthikka
Paaththirar neer thaanaiyya

Netrum indrum endrum maaraa
Enthan thuthi naayagane
Unthan naamam vaazhgavendru potriduvean!

Ennai vittu vilagathavar -Kaividaathavar
Ennai endrum maravaathavar
Vittu kodukkaathavar -2

Allelooya amen allelooya -2
Allelooya Amen Allelooya -2

1.Vaakkuthaththam seithavare vaakku maara vallavare
Varththaigalil unmaiyulla theivam neere
Setrinintru thookkineere siriyavanai uyarththineere
Unthan naamam magimai pada seithavare -2
En naavu en pagaivar meal thiranthathe
En kompu karththarukkul uyarnthathe

2.Anpil parisuththavanaai kutramillaathavanaai
Kiristhuvukkul vaazhnthia therinthavare
Narkiriyaigal naan seiyya kiristhuvukkul enai
Padaiththu unthan seigaiyaaga ennai vaiththavare
Seeyonin moolaikkalle ummai nampiduven
Seeyonin raaja neere seeyonil aattukuttiye
Jeyam petravare seeyonin athipathiye

3.Saththurukkalin munpaaga niththam oru panthiyai
Neer aayaththam panninathaal vetkamadaiyen
En thalaiyai ennaiyinaal abishegam pannukireer
En paththiram nirampida seikindreer
En jeeva naatkalellam nanmai kirubai
Endrum ennai thodarum
Um veettil neediththa naal naan nilaiththiruppean
Endrum ummodiruppean kalikoornthiduvean

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post