Oh Yesu Palanae Song Lyrics
Oh Yesu Palanae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Sathirathai Thedi.
Oh Yesu Palanae Christmas Song Lyrics in Tamil
என்னை தேடி மண்ணில் வந்த
இயேசு பாலனே வருக
என்னை மீட்க விண்ணை துறந்த
கன்னி மைந்தனே வருக
ஓ இயேசு பாலனே
உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு பாலனே
உம்மை போற்றி பாடி வரவேற்கிறேன்
வானம் விட்டு பூமி வந்தீரே
தானமாக தன்னை தந்தீரே
ஓ இயேசு பாலனே
உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு பாலனே
உம்மை போற்றி பாடி வரவேற்கிறேன்
1. காரிருள் நீக்கிடும் கதிரொளியானீரே
கவலைகள் போக்கிடும் அருமருந்தானீரே (2)
என்னை மீட்க மண்ணில் வந்தீரே
என்னில் சமாதானம் தந்தீரே
என்னை மீட்க வந்தீரே சமாதானம் தந்தீரே
சந்தோஷத்தால் பாடிடுவேன் சங்கீதம்
ஓ இயேசு பாலனே
உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு பாலனே
உம்மை போற்றி பாடி வரவேற்கிறேன்
2. அதிசயம் அற்புதம் உந்தன் வரவு
ஆனந்தம் பேரானந்தம் உந்தன் உறவு (2)
அன்பின் ரூபமாக வந்தீரே
அடைக்கலமாக வந்தீரே
அன்பின் ரூபமானீரே அடைக்கலமானீரே
ஆனந்தத்தால் பாடிடுவேன் சங்கீதம்
ஓ இயேசு பாலனே
உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு பாலனே
உம்மை போற்றி பாடி வரவேற்கிறேன்
Comments are off this post