Paarppene En Nesarai Naan Lyrics

Paarppene En Nesarai Naan Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Paarppene En Nesarai Naan Christian Song Lyrics in Tamil

பார்ப்பேனே என் நேசரை நான்
ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள்
தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும்
சாற்றுவேன் நான் துதியே துதியே

1. பாரில் எந்தன் பாவம் தீர்த்தார்
பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார்
அகத்திலே சந்தோசமளித்தார்
இகத்தி லென்றும் துதியே துதியே

2. ஆயிரங்களிற் சிறந்தோர்
ஆத்துமாவின் நேசராவர்
ஆபத்திலென் தோழனவர்
நாமத்திற்கே துதியே துதியே

3. எண்ணிறந்த தூதர் கூட்டம்
விண்ணினின்று போற்றும் நாளில்
அண்ணல் இயேசுவின்
அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன்
துதியே துதியே

4. மண்ணின் சாயல் மாறியானும்
மகிமை யேறி மாசாற்றோனாய்
மன்னனோடு மணவறையில் மகிழ்வேன்
என்றும் துதியே துதியே

Advertisement