படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
பதறாதே மனமே
அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
அனுதின வாழ்க்கையிலே
நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நாம் போற்றிடும் இயேசு பெரியவர்
1. பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
ஒருபோதும் உன்னை மறவார்
காரிருளில் நீ நடந்திடும் வேளை
ஒளியாய் வந்திடுவார்
2. கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
கலங்கிடவும் வேண்டாம்
தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
நம் இயேசு ஜீவிப்பதால்
3. வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
பள்ளங்கள் நிரப்பப்படும்
தேவனால் கூடும் எல்லமே கூடும்
கூடாத்தொன்றுமில்லையே
4. அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
நம் துணையானாரே
யெகோவாயீரே போதும் அவரே
என்றும் நம் வாழ்வினிலே
Comments are off this post