Payanam – Ajay Samuel Christian Song Lyrics

Payanam Tamil Christian Song Lyrics Sung By. Ajay Samuel.

Payanam Christian Song Lyrics in Tamil

நினைவாய் நினைவாய்
உம் கண்கள் – தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை – என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்

முடிவில் துவக்கம் காண
என் கண்களும் பூரித்து போக
என்னை கொண்டும் செய்வீர் என்று
ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர்
முன் செல்வேன் பின்னே வா என்றீர்
அழகாய் உம்மோடே பயணம்
மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும்
மெழுகாய் உருகிப் போகும்
அரவணைப்பிலே… எந்நாளுமே

என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
என்னையும் தெரிந்தீரே
என் மந்த நாவில் உம் நாவை வைக்க
என்னையும் நீர் அறிந்தீரே
என்னோடும் என்றென்றும்மாய்
உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
முன்நிற்கும் தடையெல்லாம்
தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
உம் மடியில் தவழும்
செல்ல பிள்ளை என்றும் நான்

கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
ஓர் நோக்கமுண்டு அ..ஆ…அ….
எனக்கும் ஓர் இலக்கை நீர்
நிர்ணயம் செய்தீரே
உயிரே எனக்காய் கொடுத்தீர்
நட்டாற்றில் கைவிடுவீரோ
நிற்காமல் நகரும் மேகம் போல்
என் நடையும் நில்லாமல் தொடர
கை கோர்க்கவே கூடே வருகிறீர்
சுய பெலத்தாலோ…
என்னால் கூடுமோ
சிகரத்தில் பாதம் பதிக்க
என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
என் வெகு தூர பயணம்
உம்மை சேர்வதே என் ஆசை

நினைவாய் நினைவாய்
உம் கண்கள் – தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை – என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்

என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
என்னையும் தெரிந்தீரே
என் மந்த நாவில் உம் நாவை வைக்க
என்னையும் நீர் அறிந்தீரே
என்னோடும் என்றென்றும்மாய்
உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
முன்நிற்க்கும் தடையெல்லாம்
தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
உம் மடியில் தவழும்
செல்ல பிள்ளை என்றும் நான்

நினைவாய் நினைவாய்
உம் கண்கள் – தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை – என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post