போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2)
ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்
Comments are off this post