Putham Puthu Natkal Lyrics

Putham Puthu Natkal Tamil Christian Song Lyrics from the album Promise word Song 2020 Sung by. Baby. Nebisha.

Putham Puthu Natkal Christian Song Lyrics in Tamil

புத்தம்புது நாட்கள்
புத்தம் புது கிருபை
புன்னகை பூ பூக்குதே
கர்த்தர் செய்த நன்மை
நித்தம் நித்தம் புதுமை
கணக்கில்லா ஆசீகளே – 2

இயேசு நாயகரே நம் ஆதரவே
நம்மை தப்புவித்து
விடுவித்து காப்பவரே – 2

1. யாருமில்லை என்று
ஒருநாளும் கலங்காதே
ஆதரவாய் இருப்பேன்
என்றவரும் அவர் தானே – 2

உன்னை நடத்துவார்
கரம் பிடித்துள்ளார் – 2
ஆதரவாய் உள்ளார்
அழுகையை மறந்திடு
நீ அழுகையை மறந்திடு

2. சோதனைகள் சூழ்ந்து
தடுமாறி அலைகிறாயோ
சேதம் அணுகாமல்
காப்பவரை அறிவாயோ – 2

வாக்கு செய்தவர்
சர்வ வல்லவர்-2
தப்புவிப்பேன் என்கிறார்
தடுமாற்றம் இல்லையே
இனி தடுமாற்றம் இல்லையே

3. நடந்து வந்த பாதை
முட்களாக மாறிடினும்
கடந்து வரும் நேசர்
தங்கிடுவார் கலங்காதே – 2

வழி காட்டுவார்
முன் செல்வார்
விடுப்பார் உன்னையே
ஆனந்தம் என்றுமே
இனி ஆனந்தம் என்றுமே

Other Songs from Promise word Song 2020 Album

Comments are off this post