Rev.John Dhinakaran – Yesu Thandha Needhiyal Song Lyrics
Yesu Thandha Needhiyal Christian Song Lyrics in Tamil and English From Tamil Worship Song Sung By.Rev.John Dhinakaran
Yesu Thandha Needhiyal Christian Song Lyrics in Tamil
என் சொந்த நீதியில் அல்ல
இயேசு தந்த நீதியால் நிற்கிறேன்
உரிமையோடு உந்தன் சமூகத்தில்
அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2)
இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னை
ஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )
தைரியமாய் கிருபாசனத்தின் முன்
நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 )
பாவங்களுக்கு மரிக்கச் செய்து
உம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்
பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்து
உம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்
உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்
கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச் செய்தீர் – ( 2 )
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் நடத்துகிறீர்
நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் நடத்துகிறீர்
என்னை நானே நினைப்பதைவிட
நீர் என்மேல் என்றும் நினைவாயிருக்கின்றீர் – ( 2 )
Yesu Thandha Needhiyal Christian Worship Song Lyrics in English
En sontha neethiyal alla
Yesu thantha neethiyal nirkiren
Urimaiyodu unthan samoogaththil
Appa endru ummai azhaikkiren – 2
Irulin rajjiyaththil iruntha ennai
Oliyin pillaiyakkineer – 2
Thairiyamai kirubasanaththin mun
Nindridum pakkiyam enakku thantheer – 2
Pavangalukku marikka seithu
Um neethikku pizhaikka vaiththeer
Pavangalukku ennai marikka seythu
Um neethikku pizhaikka vaiththeer
Unnathaththil unthan valappakkaththil
Kiristhuvodu ennaiyum utkara seytheer – 2
Ninaippatharkkum jepippatharkum
Athigamai nadaththukireer
Ninaippatharkum naan jepippatharkum
Athigamai nadaththukireer
Ennai naane ninaippathai vida
Neer en mel endrum ninaivayirukkindreer – 2
Comments are off this post