Saruvesan – John Jebaraj Song Lyrics
Saruvesan Tamil Christian Song Lyrics Sung By. John Jebaraj.
Saruvesan Christian Song Lyrics in Tamil
எனை நெஞ்சில் சுமக்கும்
ஒரு தெய்வம் உண்டு
அவர் நினைவில் எப்போதும் நான்
சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து
கலந்தார் என் உயிரோடு தான்
பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி
அடிக்கப்பட்டார் எனக்காக தான்
என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால்
கண்கள் குளமாகுதே-எனை நெஞ்சில்…
1. என் வாழ்வில் பெருந்துயரம்
வந்ததால் மறந்தாரோ என்றெண்ணினேன்
நெருக்கத்தின் நேரத்தில்
வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்…
சத்துருவின் தந்திரங்கள்
நேசர் அன்பை மறைக்க முயல
மனதில் உதித்த சிலுவைக்காட்சி
அதனை மேற்கொண்டதே-எனை நெஞ்சில்
2. உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே
தோள் நட்டி ஊர் மெச்சுமே
இயேசுவை போலவே உத்தம
வழி நடந்தால் பகை மிஞ்சுமே
நெடுந்தூரமோ குறுகியதோ
மேடுபள்ளம் கொண்டதுவோ
எதுவானாலும் அவரின் பின்னால்
தொடர வாஞ்சிக்கிறேன்-எனை நெஞ்சில்
