Sutha Aaviyae Ennil Vaarum Lyrics
Artist
Album
Sutha Aaviyae Ennil Vaarum Tamil Christian Song Lyrics Sung By. Jayasinghe Kalkura.
Sutha Aaviyae Ennil Vaarum Christian Song in Tamil
சுத்தஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஜீவியம் தாரும்
சுயம் என்னில் சாம்பலாய் மாற
என்னைப் படைக்கிறேன்
பொங்கிவா பொங்கிவா ஜீவ நதியே
கண்மலையின் தண்ணீரேப்
பொங்கிப் பொங்கிவா
1. மான்களைப்போலத் தேடிவந்தேன்
ஆத்துமத் தாகம் தீர்க்க வந்தீர்
கல்வாரி நோக்கி ஓடி வந்தேன்
தாகம் தீர்க்கப்பட்டேன்
2. தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
பாவத்தைப் போக்கும் சுத்த ஆவியே
அக்கினிப் போல வல்லமையாய்
என்னில் இறங்கிடுமே
3. ஆவியால் உந்தன் வல்லமையை
ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன்
ஆயத்தமாகிக் காத்திருப்பேன்
அன்பரே வந்திடுவீர்
Comments are off this post