Thaagam Theerkkum Lyrics
Thaagam Theerkkum Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Thaagam Theerkkum Christian Song in Tamil
தாகம் தீர்க்கும் ஜீவ நதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
1. அருவியின் நீரை பருகிவிட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்தைக் கானலாய் ஆகியதே – தாகம்
2. கானகம் சோலையும் தேடியபின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன்
கண்களை மெல்ல நானும் திறந்திட
கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் – தாகம்
3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார் – தாகம்
4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றும்
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே – தாகம்
