தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை
1. என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2. உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகி ழச் செய்தீரே
4. பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5. என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
Comments are off this post