Um Sitham Poal Lyrics
Um Sitham Poal Song Lyrics in Tamil
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும் – 2
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே – 2
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை – 2
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – 2
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே – 2
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – 2
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும் – 2
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – 2
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய் – 2
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – 2
Um Sitham Poal Song Lyrics in English
Um Sitham Poal Ennai Endrum
Tharparanae Neer Nadathum – 2
En Sithamoa Ondrum Vaendaam
En Piriyanae En Yaesuvae – 2
1. Thiru Maarbil Naan Saaindhiduvaen
Maru Pirayaana Kaalam Varai – 2
Paranae Undhan Thirusithathai
Arivathalloa Thooyavazhi – 2
2. Vazhi Pirayaani Moodanaippoal
Vazhi Thavari Nadandhidavae – 2
Vazhi Idhuvae Endru Sollum
Iniya Satham Dhonithidattum – 2
3. Akkinisthambam Maegasthambam
Adiyaar Meedhu Jolithidattum – 2
Iravu Pakalkooda Nindru
Endrendrumaai Nadaththidumae – 2
4. Idukkamae En Appamumaai
Kanneeroa En Thanneerumaai – 2
Parugidinum Bayappadaen Naan
Endrendrum Um Sitham Poadhum – 2
Comments are off this post