Ummai Naan Nesikindrene Lyrics

Ummai Naan Nesikindrene Yesuve Ummai Naan Nesikindrene Tamil Christian Song Lyrics Sung By. Mohan S Abraham.

Ummai Naan Nesikindrene Christian Song in Tamil

உம்மை நான் நேசிக்கின்றேனே இயேசுவே
உம்மை நான் நேசிக்கின்றேனே
உயிர் வாழும் நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிப்பேன்
உம்மைத்தான் நேசிக்கிறேனே

1. என் மீது எவ்வளவாய் அன்பு வைத்தீர்
தம் ஜீவன் எனக்காய் நீர் தந்து விட்டீர் – 2
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறவாமல் – தாயினும்
மேலாய் என் மேல் அன்பு வைத்தீர் – 2

2. பாவம் நான் செய்யாமலே காத்துக் கொண்டீர்
பரிசுத்தமாய் வாழ கிருபை தந்தீர்
லாபமான அனைத்தையும் நஷ்டம் என்று உதறிட
அப்பா நீர் எனக்கு உதவி செய்தீர்

3. சிநேகிதனாய் என்னை தெரிந்து கொண்டீர்
சிருஷ்டிகர் என்னோடே நீர் நடந்து வந்தீர்
ஏனோக்கை போல நான்
உம்மையே நோக்கிடுவேன்
இயேசுவே உம் சித்தம் என்றும் செய்வேன்

4. உலகத்தின் சிநேகம் எல்லாம் மாயை தானே
உம்மண்டை வந்தவுடன் உணர்ந்தேன் நானே
உம்மைப்போல் சிநேகிக்க யாருண்டு
என்னையும் உன் சிநேகம்
என் வாழ்வின் ஜீவன் தானே – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post