உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் -அதை
செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்
5. அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை
Comments are off this post